'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் | பிடிகொடுக்காத நடிகரால் அதிருப்தியில் பிரமாண்ட இயக்குனர் |
தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷ் நாயகனாக நடித்துள்ளார். நாரப்பா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை 2020ல் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டனர். ஆனால் கொரோனா தொற்றினால் தியேட்டர்கள் திறக்கப்படாததால் பின்னர் 2021க்கு மாற்றி வைத்தனர். தற்போதும் தியேட்டர்கள் திறக்கப்படாததால் நாரப்பா ரிலீசை காலவரையரையின்றி தள்ளிவைத்து விட்டனர்.
இந்தநிலையில், ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெங்கடேஷ் நடித்துள்ள திரிஷ்யம்-2 தெலுங்கு ரீமேக் படத்தை தற்போது வெளியிட தயாராகி விட்டனர். மார்ச் மாதத்தில் தொடங்கி 45 நாட்களில் படப்பிடிப்பை முடித்து விட்டதால் தற்போது படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது. இந்நிலையில் விரைவில் திரிஷ்யம்-2 தெலுங்கு படம் அமேசானில் வெளியாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதனால் திரிஷ்யம்-2 வெளியான பின்னர், தியேட்டர்கள் எப்போது திறக்கப்படுகிறதோ அப்போது தான் வெங்கடேஷின் நாரப்பா வெளியாகும் என்று தெரிய வந்துள்ளது.