2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

'மூடர் கூடம்' படத்தை இயக்கிய நவீன் அடுத்து விஜய் ஆண்டனி, அருண் விஜய், அக்ஷராஹாசன் மற்றும் பலர் நடிக்கும் 'அக்னி சிறகுகள்' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்றுள்ளது.
இப்படத்திற்கான பின்னணி இசையமைக்கும் வேலைகளை இப்படத்தின் இயக்குனர் நவீன், இசையமைப்பாளர் நடராஜன் சங்கரன் ஆகியோர் ஜும் மீட்டிங் மூலம் இறுதி செய்து வருகிறார்களாம்.
“இன்று ஜும் வழியாக 'அக்னி சிறகுகள்' படத்தின் பின்னணி இசையை இறுதி செய்து கொண்டிருந்தோம், நானும் கீ போர்டு புரோகிராமர் இசையமைப்பாளர் நடராஜன் சங்கரன், . முதல் ரீலில் தாடியுடன் இருக்கும் விஜய் ஆண்டனியை அடையாளம் தெரியாமல் ஹீரோ யாரு சார் என்று புரோகிராமர் கேட்டார்,” என நவீன் டுவீட் செய்துள்ளார்.
அதற்கு விஜய் ஆண்டனி, “இயக்குனர் நவீன் அவருடைய கதை சொல்லல் மூலம் என்னை இம்ப்ரஸ் செய்துவிட்டார். முதல் நாளிலிருந்தே அவ்வளவு தெளிவு. மற்ற நடிகர்களைப் போலவே நானும் எனது படத்திற்கான வெளிச்சத்தைப் பார்க்க ஆவலாகக் காத்திருக்கிறேன். வலிமையான கரு. இந்த சோதனைக் காலத்தில் 'அக்னி சிறகுகள்' நிச்சயம் நிற்கும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.