ஆயிரத்தில் ஒருவன் 2ம் பாகம் அப்டேட் தந்த செல்வராகவன்! | சூர்யா 46வது படம் காதல் கதையா? | கைவிடப்பட்ட சவுந்தர்யா ரஜினிகாந்தின் வெப் தொடர் | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணையும் பிரியங்கா சோப்ரா! | ரஜினியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன் | 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரசாந்த் | பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் |
நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்துகிறார். இதில் நயன்தாராவும் பங்குதாரராக இருக்கிறார். இந்த நிறுவனம் படங்களை தயாரிப்பதுடன், தயாரித்து முடித்து வெளியிட முடியாமல் தவிக்கும் படங்களை வாங்கி அதை வெளியிட்டும் கொடுக்கிறார்கள்.
அந்த வகையில் பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கிய கூழாங்கல் என்ற படத்தை வாங்கி வெளியிடுகிறார்கள். இதன்மூலம் நயன்தாராவும் இதன் தயாரிப்பாளர் ஆகிறார். இந்த படம் நெதர்லாந்தில் நடந்த ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் திரையிடப்பட்டு சிறந்த படத்துக்கான விருதை பெற்றது. ரோட்டர்டாம் சர்வதேச விழாவில் விருது பெற்ற முதல் தமிழ் படம் கூழாங்கல்.
இதையடுத்து நியூயார்க்கில் நடந்த டைரக்டர்ஸ் நியூ திரைப்பட விழாவுக்கும் அனுப்பப்பட்டது. அங்கு கூழாங்கல் படம் திரையிடப்பட்டு சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு விருது பெற்றுள்ளது. இது குடிகார தந்தைக்கும், மகனுக்குமான உறவு பற்றிய கதை.