நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

சில தினங்களுக்கு முன்பு நயன்தாராவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிடப்பட்டு பின்னர் நீக்கப்பட்டதாக கூறப்பட்ட ஸ்க்ரீன்ஷாட் ஒன்று வைரலாக பரவியது. அதில் “ஒரு முட்டாளை திருமணம் செய்யும்போது திருமணம் என்பது ஒரு தவறு என்று ஆகிறது. உங்கள் கணவரின் நடவடிக்கைகளுக்கு நீங்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். காரணம் ஆண்கள் உண்மையில் வளர்வதே இல்லை” என்ற வாசகங்கள் அதில் இடம் பெற்றிருந்தன. இதை வைத்து நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் பிரிய போவதாக செய்திகள் பரவின. ஆனால் இது போலியான நபர்களால் உருவாக்கப்பட்ட பதிவு. இதுபற்றி கூட நாம் விசாரித்து ஒரு செய்தி வெளியிட்டு இருந்தோம். அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர் என அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நடிகை நயன்தாரா தனது இன்ஸ்ட்ராகிராமில் ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார். அதில் விக்னேஷ் சிவன் முதுகில் அவர் படுத்திருப்பது போன்ற படம் ஒன்றை வெளியிட்டு “எங்களை பற்றி வரும் கிறுக்குத்தனமான செய்திகளுக்கு எங்களுடைய ரியாக்ஷன்” என்று குறிப்பிட்டுள்ளார்.