300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
மலையாள சினிமாவின் முன்னணி நடிகையான அன்னா பென் 'கொட்டுக்காளி' படத்தின் மூலம் அறிமுகமானார். இதில் அவருக்கு பாராட்டுகளும், பல விருதுகளும் கிடைத்தது. இந்த நிலையில் அடுத்து அவர் இன்னும் பெயரிடப்படாத படத்தின் மூலம் மீண்டும் தமிழில் நடிக்கிறார்.
இந்த படத்தை நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனமான நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 'நாய் சேகர்' படத்தை இயக்கியவரும், கோமாளி, கைதி, விஐபி ', இமைக்கா நொடிகள், கீ உள்ளிட்ட படங்களில் நடித்தவருமான கிஷோர் ராஜ்குமார் இயக்கி, நாயகனாக நடிக்கிறார்.
படம் பற்றி அவர் கூறும்போது “காதலும் நகைச்சுவையும் நிரம்பிய கதை இது. 'பீல் குட்' உணர்வைத் தரும் வகையில் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை உருவாக்க உந்து சக்தியாக இருந்தவர் கே.பாக்யராஜ் சார். அவர் இயக்கிய படங்கள் போல இன்றைய காலகட்டத்தில் படங்கள் வருவதில்லையே என்ற குறையை இந்தப் படம் போக்கும். ஜோடி பொருத்தம் பற்றி பேசும் இந்த கலகலப்பான படம் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் இருக்கும். திறமையான நடிகையான அன்னா பென் உடன் இணைவதில் மிகவும் மகிழ்ச்சி” என்றார்.