
ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா
அதில், இந்த பரபரப்பான உலகை விட்டு விலகி உண்மையான வாழ்க்கை என்னவென்று உணர விரும்பினால் உங்கள் பிள்ளைகளை கூட்டிக் கொண்டு மலை ஏறுங்கள். அப்படி இல்லை என்றால், இயக்குனர் ராமின் பறந்து போ படத்திற்கு அவர்களை கூட்டிச் செல்லுங்கள். காரணம் இந்த படம் நமக்கு வாழ்க்கையில் என்ன தேவை, எதை இழக்கிறோம் என்பதை அழகாக சொல்கிறது. நான் இதுவரை பார்த்த படங்களில் இது ஒரு இனிமையான படம். இயக்குனர் ராமிற்கும் அவரது பட குழுவுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் என்று தெரிவித்திருக்கிறார் நயன்தாரா.
பறந்து போ படம் திரைக்கு வந்து நான்கு நாட்களில் இதுவரை ரூ.4.1 கோடி வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல் தெரிவிக்கிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!