காதல் கதையில் அர்ஜூன் தாஸ் | நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி நீட்டிப்புக்கு பதிவாளர் ஒப்புதல்: நீதிமன்றத்தில் தகவல் | பிளாஷ்பேக்: 3 ஹாலிவுட் படங்களை தழுவி உருவான 'நாடோடி மன்னன்' | பிளாஷ்பேக்: நிஜ ராணுவ முகாமில் எடுக்கப்பட்ட படம் | 8 வார இடைவெளியில் ஓடிடி, தயாரிப்பாளர்கள் சம்மதிப்பார்களா? | அல்லு சினிமாஸ் 'புகழ் சுவர்' - அட்லிக்கு இடம் தந்த அல்லு அர்ஜுன் | மார்ச் 15 முதல் புதிய படங்களுக்கு சப் டைட்டில், ஆடியோ விளக்கம் கட்டாயம் | லாரி ஏறிச் சென்று படம் பார்த்தேன்: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி | காதல் பிரிவில் அர்ஜுன் தாஸ்? | வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை |

ஹிந்தியில் ஆதித்ய தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் திரைக்கு வந்த படம் 'துரந்தர்'. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பு பெற்றதால் உடனடியாக இரண்டாம் பாகத்தையும் தொடங்கினார்கள். அதோடு வருகிற மார்ச் மாதம் 19ம் தேதி துரந்தர் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்தது.
இந்த நிலையில் தற்போது இப்படத்தின் டீசர் குறித்த ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. அதில், 'துரந்தர் 2' படத்தின் டீசர் ஜனவரி 23ம் தேதி ஹிந்தியில் வெளியாகும் 'பார்டர் -2' படத்துடன் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பார்டர்- 2 படத்தில் சன்னி தியோல், வருண் தவான் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். அனுராக் சிங் இப்படத்தை இயக்கியுள்ளார்.