ரஜினி, கமல் படத்திலிருந்து விலகிய சுந்தர்.சி : மன்னிப்பு கேட்டு அறிக்கை | கொரில்லா பாணியில் நடந்த யெல்லோ படப்பிடிப்பு | தியாகராஜ பாகவதர் கதைக்கும், காந்தாவுக்கும் தொடர்பா? | ரஜினி, கமல் இணையும் படம் : இசையமைப்பாளர் யார்? | பாட்டியாக நடிக்கிறாரா ரோஜா? | பேய் கதைக்கு ‛ரஜினி கேங்' தலைப்பு ஏன்? | ஜி.வி.பிரகாஷின் 100வது படத்தில் பாடிய யுவன் சங்கர் ராஜா | மகன் விஷயத்தில் விஜய் ஒதுங்கி இருக்க இதுதான் காரணமா ? | 'கும்கி 2' தாமதம் ஏன்?: பிரபு சாலமன் விளக்கம் | தனுஷ் மருமகன் பவிஷ் நடிக்கும் ‛லவ் ஓ லவ்' |

கொரோனா பரவலின் தீவிரம் காரணமாக நாடு ஒரு இக்கட்டான சூழலில் இருந்து வருகிறது. இந்த நிலையில் சில நடிகைகள் அவர்களது சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருவது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இன்னும் சில நடிகைகளோ கொரோனா பரவல் குறித்து 'அட்வைஸ்' பதிவுகளைப் போட்டுவிட்டு மாலத் தீவிற்கு ஓய்வெடுக்கச் செல்வது குறித்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
சில சீனியர் சினிமா பிரபலங்கள் இறந்த போது கூட சில நடிகைகள் பிறந்தநாளைக் கொண்டாடுவதும், அன்றைய தினங்களில் கூட கிளாமர் புகைப்படங்களை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்திருப்பதாகவும் சிலர் குற்றம் சாட்டுகிறார்கள். குறைந்தபட்சம் அந்த ஒரு நாளைக்காவது அவர்களது கொண்டாட்டங்களைத் தள்ளி வைக்கலாமே என்றும் சொல்கிறார்கள்.
இது பற்றி சில பெண் பிரபலங்கள் கூட அவர்களது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்கள். சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகை ஸ்ருதிஹாசன் இது பற்றி கூறுகையில், “பலர் அவர்களது விடுமுறையைக் கொண்டாடி வருகிறார்கள். அவர்கள் அதைச் செய்யலாம், ஆனால், தற்போது பலருக்கும் ஒரு கடினமான சூழலே உள்ளது. நம்முடைய கொண்டாட்டங்கள் மற்றவர்களது உணர்வுகளை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சினிமாவில் இன்னம் பிரபலமாகாத சில தமிழ் நடிகைகள், டிவி நடிகைகள்தான் இப்படி கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.