தனுஷ் 55ல் இணைந்தார் ஸ்ரீலீலா | போட்டோகிராபர் செய்த செயல் : கசப்பான அனுபவம் பகிர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ் | அட்லி, அல்லு அர்ஜுன் படப்பிடிப்பில் பிப்ரவரி முதல் இணையும் ஜான்வி கபூர் | ரஜினி 173வது படத்தின் கதை ஹாலிவுட் படத்தின் தழுவலா? | ஜூலையில் வெளியாகும் சூர்யா 46வது படம் | பெத்தி படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மிருணாள் தாக்கூர் | பிளாஷ்பேக் : இரவு காட்சிகளை பகலில் படமாக்கிய முதல் படம் | 2027 ஏப்ரல் 7 : வாரணாசி வெளியீட்டு தேதி அறிவிப்பு | கேரளா ஸ்டோரி இரண்டாவது பாகமும் பரபரப்பு கிளப்புகிறது | வேள்பாரி கதையில் நடிக்கப்போவது யார்? : ரஜினிக்கு கவுரவ வேடமா? |

'அசுரன்' படத்திற்குப் பிறகு தனுஷ் மீதான விமர்சனப் பார்வை மாறிவிட்டது. மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தும் இன்றைய இளம் நடிகர்களில் இவர்தான் முன்னணியில் இருக்கிறார்.
சமீபத்தில் வெளிவந்த 'கர்ணன்' படமும் தனுஷ் மீதான இமேஜ் மேலும் வளரக் காரணமாக இருந்தது. இனி, அவர் சாதாரண கமர்ஷியல் படங்களில் நடித்தால் பொருத்தமாக இருக்காது என பலரும் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
தற்போது ஹாலிவுட்டில் 'தி கிரே மேன்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் தனுஷ். அங்கிருந்தபடியே மீண்டும் 'கர்ணன்' படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜுடன் புதிய படத்தில் நடிக்க உள்ளேன் என்று அறிவித்துள்ளார்.
ஏற்கெனவே கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் சில நாட்கள் நடித்துள்ளார் தனுஷ். அடுத்து 'மாரி' பட இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்திலும் ஒரு புதிய படத்தில் நடித்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இப்படம் பற்றி இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இவற்றோடு அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் 'நானே வருவேன்' என்ற படத்திலும் நடிக்க உள்ளார். 2024ம் ஆண்டில் மீண்டும் செல்வராகவன் இயக்கத்தில் 'ஆயிரத்தில் ஒருவன் 2' படத்தில் நடிக்கப் போகிறார்.
இவை தவிர, தற்போது 'அத்ராங்கி ரே' என்ற ஹிந்திப் படத்திலும் நடித்து முடித்துள்ளார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்துள்ள 'ஜகமே தந்திரம்' படம் ஜுன் மாதம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
அடுத்த சில ஆண்டுகளுக்கான தன்னுடைய படங்கள் எவையெவை என்பது பற்றி தனுஷ் தெளிவாக முடிவெடுத்துவிட்டார் என திரையுலகத்தில் சொல்கிறார்கள்.