ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தவர் சிவாங்கி. அந்த நிகழ்ச்சியில் டைட்டில் வெல்லவில்லை என்றாலும் அவருக்கென்று தனி ரசிகர் வட்டம் உருவானது. இதனை கருத்தில் கொண்டு சேனல் நிர்வாகம் அவரை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இறக்கியது.
தனது குழந்தைத்தனமான சேட்டைகளால் அங்கும் ரசிகர்களை கவர்ந்தார் சிவாங்கி. சினிமாவில் காமெடி நடிகைகள் பற்றாக்குறை நிலவும் நேரத்தில் சிவாங்கிக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. ஏற்கெனவே சிவகார்த்திகேயன் படத்தில் நடித்து வரும் சிவாங்கி தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ஆர்டிகள் 15 பட ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. விரைவில் சிவாங்கி படப்பிடிப்பில் கலந்துகொள்வார் எனத் தெரிகிறது.