பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
கொரோனா பரவல் காரணமாக சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மட்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலத்திலும் இரவு 9 மணி முதல் விடியற்காலை 5 மணி வரை ஊரடங்கு உள்ளது. ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டும் அரசு அனுமதி வழங்கியுள்ளது. சினிமா படப்பிடிப்புகள் உள்ளிட்டவைகளுக்கு அனுமதி இல்லை.
ரஜினிகாந்த் நடித்து வரும் 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. சிரஞ்சீவி, மகேஷ் பாபு, ராம் சரண் ஆகியோர் நடிக்கும் படங்களின் படப்பிடிப்புகள் கொரோனா பயம் காரணமாக அங்கு நிறுத்தப்பட்டுவிட்டன. ஆனால், 'அண்ணாத்த' படப்பிடிப்பை மட்டும் நடத்தி வருகிறார்களாம். தீபாவளிக்கு படத்தை வெளியிட முடிவு செய்துவிட்டதால் இப்படி நடத்துவதாகச் சொல்கிறார்கள்.
இதனிடையே, படத்தை உரிய காலத்தில் முடிக்க வேண்டுமென்றால் இடைவிடாமல் படப்பிடிப்பு நடத்த வேண்டி உள்ளதாம். அதனால், தற்போது தெலங்கானாவில் இரவு நேர ஊரடங்கு இருந்தாலும் சிறப்பு அனுமதி பெற்று படத்தை நடத்த உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வருடம் அங்கு 'அண்ணாத்த' படப்பிடிப்பு நடந்த போது படக்குழுவில் உள்ள சிலருக்கு கொரானோ பாதிப்பு ஏற்பட்டது. ரஜினிகாந்தும் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சில நாட்கள் ஓய்வு எடுத்து பின்னர் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு சென்னை திரும்பினார்.
இப்போது கொரோனா பரவல் தீவிரமாக உள்ள நிலையில், இரவு நேர ஊரடங்கு உள்ள சமயத்திலும் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்துவதை தெலுங்குத் திரையுலகினரே ஆச்சரியத்துடன் பார்க்கிறார்களாம்.