தனுஷூக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே! | அஜித் பட ஹீரோயின் யார் | சினிமாவில் நடப்பதை மட்டும் பூதக் கண்ணாடி வச்சு பாக்காதீங்க : குஷ்பு காட்டம் | பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா | அர்ஜுன் தாஸ் குரலைப் பாராட்டிய பவன் கல்யாண் | சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் | இந்த வாரம் அப்பா, மகள் ; குரு, சிஷ்யன் படங்கள் மோதல் | லவ் மேரேஜ் படம் ஹிட்டா? : கணக்கு சொல்லாத படக்குழு | '96' இரண்டாம் பாகம் : விலக முடிவெடுத்த விஜய் சேதுபதி? |
வளர்ந்து வரும் பாலிவுட் நடிகை சிவாங்கி. தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த சிவாங்கி தற்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். தற்போது அவர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படத்தை வெளியிட்டு அவர் எழுதியிருப்பதாவது: அனைவருக்கும் வணக்கம். கடந்த 2 நாட்களுக்கு முன் எனக்கு சிறுநீரக தொற்று ஏற்பட்டது. தற்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். கடந்த 2 நாட்களாக கடினமான சூழலில் இருந்து மீண்டு வருகிறேன். மருத்துவர்கள், குடும்பத்தினர் உதவியுடன் குணமடைந்து வருகிறேன். எனது நண்பர்களும், ரசிகர்களும் அவர்களது ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். என்று தெரிவித்துள்ளார்.