விஜய்சேதுபதியா... துருவ் விக்ரமா... மணிரத்னம் சாய்ஸ் யார்? | விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படப்பிடிப்பு நிறைவு | ரஜினி படத்தை தனுஷ் இயக்குவாரா? | ப்ரண்ட்ஸ் ரீ ரிலீஸ் விழா : படக்குழு ஆப்சென்ட் | 'வாரணாசி' முன்னோட்ட வரவேற்பு: ராஜமவுலியின் நன்றி | மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! |

நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் விஜய், பூஜா ஹெக்டே நடிக்கும் விஜய்யின் 65வது படத்தின் பூஜை இன்று(மார்ச் 31) சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் மட்டுமே கலந்து கொண்ட இந்த பூஜையில் விஜய் கலந்து கொண்டார். ஆனால், படத்தின் நாயகியான பூஜா ஹெக்டே கலந்து கொள்ளவில்லை. அதனால், அவர் வருத்தமடைந்துள்ளார்.
“நான் படப்பிடிப்பில் இருப்பதால் விஜய் 65 படத்தின் பூஜையில் இன்று கலந்து கொள்ள முடியவில்லை. ஆனால், எனது உணர்வும், மனமும் படக்குழுவினருடன் தான் உள்ளது. வாழ்த்துகள், உங்களுடன் சீக்கிரம் இணைந்து கொள்ள காத்திருக்க முடியவில்லை,” என வருத்தத்துடன் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் பூஜா ஹெக்டே இப்படத்தில் நடிப்பதை விஜய் ரசிகர்கள் அதிகம் வரவேற்றுள்ளார்கள். பூஜாவின் இந்தப் பதிவுக்கு மட்டும் ரசிகர்களின் லைக்குகள் அதிகம் வந்துள்ளது. பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழுக்கு வரும் பூஜாவிற்கு இந்த வரவேற்பு நிச்சயம் மகிழ்ச்சியைத் தந்திருக்கும்.