மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி | பிளாஷ்பேக்: ஒரே கதையை படமாக்க போட்டிபோட்ட தயாரிப்பாளர்கள் | 'விடாமுயற்சி' செய்யாததை செய்த 'குட் பேட் அக்லி' | இந்த வாரம் ஓடிடி-யில் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி? |
'நேர்கொண்ட பார்வை, வலிமை' படங்களைத் தொடர்ந்து மீண்டும் அஜித், இயக்குனர் வினோத் கூட்டணி மூன்றாவது முறையாக இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 'வலிமை' படத்திற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடைபெற வேண்டி உள்ளது. தேர்தலுக்குப் பின் ஸ்பெயின் நாட்டில் அந்த படப்பிடிப்பு நடக்கலாம்.
இதனிடையே, இதுவரை எடுத்த 'வலிமை' படக் காட்சிகளை படக்குழுவினர் போட்டு பார்த்திருக்கிறார்கள். படம் வேற லெவலில் இருப்பதாகவும், சாதாரண ரசிகர்களுக்கு இப்படம் புரியுமா என்ற சந்தேகமும் வந்ததாகவும் சொல்கிறார்கள். அதனால், சில காட்சிகளை திருத்தவும் முடிவு செய்துள்ளார்களாம். இருந்தாலும் படத்தைப் பார்த்த அஜித், மீண்டும் வினோத் உடன் ஒரு படத்தில் நடிக்க சம்மதம் சொல்லியுள்ளாராம். அந்தப் படத்தையும் போனி கபூர்தான் தயாரிக்கப் போகிறாராம்.
'நேர்கொண்ட பார்வை, வலிமை' இரண்டு படங்களின் சம்பளம், வியாபார விவகாரம் ஆகிய கணக்குகளில் கொஞ்சம் முன்னே, பின்னே இருப்பதும் ஒரு காரணம் என்கிறார்கள். அந்தப் படத்தை முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக மட்டுமே எடுக்க வேண்டும் என அஜித் கேட்டுக் கொண்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.