ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றி தேர்தலை சந்திக்க வேண்டும் என்று ஆயத்தமானவர் தான் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர். ஆனால் அதற்கு விஜய் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து எஸ்.ஏ.சியின் அரசியல் பிரவேசம் தடைபட்டது. என்றாலும் பொங்கலுக்கு பிறகு எனது அரசியல் முடிவை அறிவிப்பேன் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் சந்திரசேகர். அதில், ‛‛கடந்த சில தினங்களாகவே எனது நண்பர்களும், இளைஞர்களும் இந்த தேர்தலில் யாருக்கும் ஓட்டுப்போட வேண்டும் என்று கேட்கிறார்கள். அதோடு, சிலர் எங்களுக்கு ஓட்டுப் போடவே பிடிக்கவில்லை என்கிறார்கள்.
அவர்களுக்கு நான் சொன்ன ஒரே பதில், எந்த கட்சியும் பிடிக்கவில்லை என்பதற்காக ஜனநாயக கடமையை ஆற்றாமல் இருந்து விடாதீர்கள். அதே போல் பணம் வாங்கி விட்டு ஓட்டளிக்காதீர்கள். அது குற்றம். மேலும், பெரும்பாலானோர் அரசியல் சிஸ்டத்தையே மாற்ற வேண்டும் என்கிறார்கள். புதியவர்கள் வந்தால் தான் அனைத்திலும் மாற்றம் வரும். அப்படியென்றால் காமராஜர், அண்ணா, கக்கன் ஆகியோரைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நேர்மையான, தூய்மையான, மக்களுக்காகவே உழைக்கக்கூடி ய தன்னலமற்றவர்களாக ஆட்சிக்கு வருபவர்கள் இருக்க வேண்டும். நான் எந்த கட்சியையும் குறிப்பிட்டு சொல்லவில்லை.
காமராஜர், அண்ணாதுரை மாதிரியான புதியவர்களை ஆதரிக்க வேண்டும் என்கிறேன். மாற்றத்தை கொண்டு வர நினைக்கும் பலர் அரசியலுக்கு வர பயப்படுகிறார்கள். ஆனால் அப்படிப்பட்டவர்களை எப்படி அரசியலுக்கு வர வைக்க வேண்டும் என்றால், நீங்கள் நோட்டாவுக்கு வாக்களிக்க வேண்டும். ஒரு கோடிக்கும் அதிகமானோர் நோட்டாவுக்கு வாக்களித்தால் அரசியலுக்கு வந்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஊக்கத்தை கொடுக்கும். பொதுவாக தலைவன் தொண்டர்களை உருவாக்குவதை விட தொண்டர்களே தலைவனை உருவாக்க வேண்டும்.
அதனால் 2026ஆம் ஆண்டில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்று விரும்பினால் ஒரு கோடி பேருக்கு மேல் நோட்டாவுக்கு வாக்களித்து அதை தெளிவு படுத்துங்கள். அப்படி செய்தால் காமராஜர், அண்ணா போன்ற நேர்மையாக மக்களுக்காக உழைக்கக்கூடிய தலைவர்களை நீங்கள் கொண்டு வரலாம். அதனால் 2026ல் மாற்றம் வேண்டும் என்றால் அதற்கான அடிக்கல்லை இந்த தேர்தலில் பதிவு செய்யுங்கள்.
இப்படி சொல்வதால் எனக்கு எந்த பலனும் இல்லை. மாறாக சிலரது கோபத்துக்கு ஆளாவேன். இருந்தாலும் உண்மையை சொல்ல வேண்டுமல்லவா? இளைஞர்களை சரியாக யோசித்து பாருங்கள். சரி என்று பட்டால் நீங்களும், உங்கள் குடும்பத்தினரும் இதை செய்யுங்கள்.
இவ்வாறு அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர்.