அபிராமிக்கு சிபாரிசு கடிதம் தர மறுத்த கமல் | ‛அலைபாயுதே' படத்தின் ரகசியத்தை முதல்முறையாக பகிர்ந்த மணிரத்னம்! | பள்ளி பருவத்தை நினைவுகூர்ந்த சாய் பல்லவி! | இயக்குனர் அவதாரம் எடுக்கும் லப்பர் பந்து நாயகி! | சாதி தொடர்பான படங்களை எடுப்பதில் உடன்பாடில்லை: கவுதம் மேனன் கருத்து | சிம்பு பிறந்தநாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்! | ராம் கோபால் வர்மா கம்பேக் தருவாரா? | ‛ஜனநாயகன்' படத்தின் செகண்ட்லுக் போஸ்டர்: குஷியான ரசிகர்கள் | சவால் விடும் தாரா நடிகை | பத்மபூஷன் - சீனியர் நடிகர்களுடன் இணைந்த அஜித் |
கொரோனா வந்தாலும் வந்தது திரையுலகம் ஏறக்குறைய விழுந்தே கிடக்கிறது. கொரோனா தளர்வுகளின் காரணமாக கடந்த வருடம் நவம்பர் மாதம் 10ம் தேதி தியேட்டர்கள் திறக்கப்பட்டன. ஆனால், ரசிகர்கள் படம் பார்க்க ஆர்வம் காட்டவில்லை.
பொங்கலை முன்னிட்டு வெளிவந்த 'மாஸ்டர்' படத்திற்கு மட்டுமே ரசிகர்கள் வந்தார்கள். அந்தப் படத்தை ஓடிடியில் வெளியிட்ட பிறகும் கூட தியேட்டர்களுக்கு வந்து ரசிகர்கள் படம் பார்த்து ரசித்தார்கள்.
அதற்கு முன்பும், பின்பும் வெளிவந்த படங்கள் வியாபார ரீதியில் லாபத்தைக் கொடுக்கும் அளவிற்கு வசூலிக்கவில்லை என்பதுதான் உண்மை. இதனிடையே, அடுத்த பெரிய நடிகரின் படமாக கார்த்தி நடித்துள்ள 'சுல்தான்' படம் நாளை மறுநாள் ஏப்ரல் 2ம் தேதி வெளியாகிறது.
தமிழ்நாட்டில் சுமார் 450 தியேட்டர்கள் வரை இப்படம் வெளியாகிறது. 'மாஸ்டர்' படத்திற்கு வந்ததைப் போலவே இந்தப் படத்திற்கும் ரசிகர்கள் வருவார்கள் என தியேட்டர்காரர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இத்தனை தேர்தல் பரபரப்பிலும் ரசிகர்கள் 'சுல்தான்' படம் பார்க்க தியேட்டர்கள் பக்கம் வந்துவிட்டால் அடுத்த வாரம் வெளியாக உள்ள 'கர்ணன்' படத்தையும் பார்க்க வந்துவிடுவார்கள் என எதிர்பார்க்கிறார்கள்.
அது திரையுலகம் மீண்டும் உயிர்த்தெழ காரணமாக இருக்கும். இரண்டு படங்களுமே ரசிகர்கள எதிர்பார்க்கும் படங்களாக அமைந்துவிட்டால் ஏப்ரல், மே மாதங்களில் வெளியாக உள்ள படங்களுக்கும் புத்துணர்வைத் தரும்.