விஜயுடன் இணைய தயார்: ‛புலி' பட தயாரிப்பாளர் அறிவிப்பு | உண்மை சம்பவம் பின்னணியில் உருவான ‛ரோஜா மல்லி கனகாம்பரம்' | ‛போலீஸ் ஸ்டேஷன் மெயின் பூத்': ரம்யா கிருஷ்ணனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராஷ்மிகாவின் ‛மைசா' படப்பிடிப்பு கேரளா அதிரப்பள்ளி காட்டுப் பகுதியில் தொடங்கியது! | அஜித் 64வது படம் : பிளானை மாற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்! | தன்னுடைய பெயரில் ரசிகர் நடத்தும் ஹோட்டலுக்கு அனுமதி அளித்த சிரஞ்சீவி | பஸ் விபத்து எதிரொலி ; மீனாட்சி சவுத்ரி போஸ்டர் வெளியீட்டை தள்ளிவைத்த நாக சைதன்யா படக்குழு | சீனியர் நடிகர் மதுவை நேரில் சென்று சந்தித்த மம்முட்டி | காந்தாராவை பணத்திற்காக எடுக்கவில்லை: ரிஷப் ஷெட்டி | 2030லாவது மகாபாரதத்தை ஆரம்பிப்பீர்களா ? ராஜமவுலிக்கு மகேஷ்பாபு கேள்வி |

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன கலைக்கல்லூரி பிரமாண்ட அரங்கத்தில் தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் 60வது மணிவிழா மாநாடு நடைபெற்றது. 10 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் முதல் நாளில் இசையமைப்பாளர் இளையராஜா மகனும், இசையமைப்பாளருமான கார்த்திக் ராஜாவின் இன்னிசை கச்சேரி நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் கார்த்திக் ராஜா கூறியதாவது: தருமபுரம் ஆதீனத்தின் முன்னிலையில் இசையமைப்பது எனக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. மிகப்பெரிய மரியாதை கிடைத்துள்ளது சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. எனது இசை நிகழ்ச்சியை முழுமையாக ரசித்து நன்றாக உள்ளது என அவர் சொன்னதை ஆசிர்வாதமாக கருதுகிறேன்.
‛தருமபுரம் ஆதீனத்தின் இசை புலவர்' என்ற விருது வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்கள். இதற்கு முன்பு இந்த விருதை பாடகர் கே.ஜே யேசுதாஸ்சுக்கு வழங்கப்பட்டது. அவருக்கு பின்னர் நான் வாங்கும் போது ரொம்ப சின்னவனாக தெரிகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.