‛டாடா' இயக்குனர் இயக்கத்தில் ஜெயம் ரவி | ''இது எனது கனவு'': 'குட் பேட் அக்லி' படத்தில் அஜித்துடன் இணைந்த பிரசன்னா நெகிழ்ச்சி | 'விஜய் 69' படத்தில் பிரியாமணி, நரைன்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | மேடை சரிந்து விபத்து: காயமடைந்த பிரியங்கா மோகன் | ரஜினியின் ‛வேட்டையன்' படத்துக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு | யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் விமர்சிக்காதீர்கள் : நடிகர் நெப்போலியன் உருக்கமான வேண்டுகோள் | ஆவண படம் இயக்கி விருது பெற்ற சூர்யா- ஜோதிகாவின் மகள் தியா | வடிவேலுவின் வெற்றிக்கு பின்னால் நான்தான் இருந்தேன்: சிங்கமுத்து பதில் மனு | திரு இயக்கத்தில் ரிலீஸ்க்கு தயாராகும் புதிய படம் | அமரன் படத்தின் முதல் பாடல் நாளை(அக்., 4) வெளியாகிறது |
'கவிதைகள் சொல்லவா... உன் பெயர் சொல்லவா... இரண்டுமே ஒன்று தான் ஹோ... ஹோ...' - இந்த பாடலை கேட்கும் போது, படத்தின் பெயருக்கு ஏற்ப, நிச்சயம் உள்ளம் கொள்ளை போகும். உல்லாசம் படத்தில், 'வீசும் காற்றுக்கு' பாடலை மெய் மறந்து கேட்டால், மயில் இறகால் வருடி விட்டு போன உணர்வு தென்படும். 'காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது...' கொஞ்சம் இறங்கி அடித்த பாடல்.
இசைஞானியின் அற்புத இசையும், தம்பி யுவனின் துள்ளலான இசையும், கார்த்திக் ராஜாவுக்குள் அடங்கியிருக்கிறது. இசை நிகழ்ச்சி குறித்த பத்திரிகையாளர் சந்திப்புக்காக, கோவை வந்த கார்த்திக் ராஜாவை சந்தித்தோம்.
இவ்வளவு வருடங்கள் கழித்தும், தமிழ் திரையுலகில் தனக்கான இடத்தில் கோலோச்சிக் கொண்டிருக்கிறார் இளையராஜா. அவரிடம் நீங்கள் கற்றுக் கொண்டது என்ன?
முதலில் நான் அப்பாவிடம் கற்றுக் கொண்டது ஒழுக்கம். ஆரம்ப காலம் தொட்டு இன்று வரை, காலை 7:00 மணிக்கு ஸ்டுடியோவுக்கு சென்று விடுவார் அவர். இசை கோர்ப்பு இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி. பின்னாளில் தான் அவரிடம் இருந்த இசை தாகம் என்னுள் வந்தது. 40 வருடங்களுக்கு மேலாகியும், அவர் இசையமைத்து கொண்டிருப்பது எங்களுக்கெல்லாம் மிகப்பெரிய மகிழ்ச்சி.
நீங்கள் இசையமைத்த பாடல் எல்லாம் மிகப்பெரும் வரவேற்பு பெற்றது. ஆனால், உங்களுக்கான இடம் இன்னும் கிடைக்கவில்லை என்று நினைக்கிறீர்களா? ஏன் இந்த தொய்வு?
இதை தொய்வு என்று சொல்ல முடியாது. நான் இசையமைத்த பல பாடல்களை, பல இடங்களில் கச்சேரிகள் நடத்தும் போது, ரசிகர்கள் இன்னும் அதை கேட்டு, பாடச் சொல்கின்றனர். சினிமாவுக்கு இசையமைப்பது மட்டுமல்லாமல், இடையில் விளம்பரப் படங்களுக்கும் தொடர்ந்து இசையமைத்துக் கொண்டிருந்தேன். என்னுடைய பாதையில் தொடர்ந்து பயணித்து தான் கொண்டிருக்கிறேன். தற்போது, இரண்டு படங்களுக்கு இசையமைக்க, பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
தற்போது, இளைஞர்களின் ரசனைக்கு ஏற்ப பாடல் கொடுக்கிறார்களா? இல்லை, இளைஞர்கள் அதை ஏற்றுக் கொள்வார்கள் என்று பாடல் கொடுக்கிறார்களா?
கால மாற்றத்துக்கு ஏற்ப, இசையும் மாறிக் கொண்டு தான் வருகிறது. இதை மாற்ற முடியாது. இளைஞர்கள் விரும்புகிறார்கள் என்றால் அதில் தவறில்லை. எல்லோருக்கும் ஒரு ரசனை உண்டு. இப்போதிருக்கும் இசை இனியும் தொடரலாம். தொடராமலும் போகலாம். ஆனால், மருந்து என்று ஒன்று தேவைப்படுமானால், அது பழங்கால இசை தான்.
சமீபகாலமாக, இசைஞானி இளையராஜாவை சுற்றி சர்ச்சைகள் உருவாகி வருகிறது? இதை எப்படி பார்க்கிறீர்கள்?
அவர் வேலையை அவர் பார்த்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் கூட, மொழியா, இசையா என்ற ஒரு சர்ச்சை வந்தது. சில நாட்கள் கழித்து, இசைஞானியே அதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். சர்ச்சை உருவான சமயத்தில், நான் சிம்பொனிக்கு இசையமைத்து விட்டேன் என்றார் இசைஞானி. அந்தளவுக்கு இசையில் மூழ்கி விட்டார் அவர்.