'கங்குவா' அறிவிப்பும் வந்தது…'தங்கலான்' எப்போது? | ‛காட் பிளஸ் யூ மாமே...' : ‛குட் பேட் அக்லி' இரண்டாவது போஸ்டர் வெளியீடு | மீண்டும் அனிமல் பட இயக்குனர் உடன் இணையும் ராஷ்மிகா | சூர்யா நடிக்க இருந்த 'கர்ணா' டிராப்பா ? | தாமதமாகும் 'கேம் சேஞ்சர்' ரிலீஸ் : இயக்குனர் ஷங்கர் பதில் | கமல் Vs ரஜினி, விஜய் Vs அஜித் : ஏட்டிக்குப் போட்டியாக அப்டேட்டுகள் | வருகிற கிறிஸ்துமஸ்க்கு திரைக்கு வரும் பேபி ஜான் | உலகில் யாராலும் இப்படி நடிக்க முடியாது : கமல் குறித்து ஷங்கர் பெருமிதம் | சிம்புவை தொடர்ந்து வெங்கல் ராவுக்கு உதவிய கே.பி.ஒய்.பாலா, ஐஸ்வர்யா ராஜேஷ் | மீண்டும் அரசியலுக்கு வருகிறார் சிரஞ்சீவி? |
நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, மம்தா மோகன்தாஸ் மற்றும் பலர் நடித்த 'மகாராஜா' படம் ஜுன் 14ம் தேதி தமிழ், தெலுங்கில் வெளியானது.
உலக அளவில் சுமார் 60 கோடி வசூலை நெருங்கியுள்ள இப்படம் வெற்றிகரமான படமாக அமைந்து லாபத்தைக் கொடுத்துள்ளது. தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் இப்படம் லாபகரமான படமாக அமைந்துள்ளது.
அங்கு சுமார் 9 கோடிக்கு இந்தப் படம் வசூலாகியுள்ளது. சுமார் 3 கோடிக்கு அங்கு வியாபாரம் நடந்துள்ளது. செலவுகள் போக 1 கோடி வரையில் லாபத்தைக் கொடுத்துள்ளதாக டோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
'கல்கி 2898 ஏடி' படம் வெளியாகும் வரை அங்கு இந்தப் படம் ஓடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் லாபத் தொகை இன்னும் அதிகமாகலாம்.