காதலனுக்காக தயாரிப்பாளரான நடிகை | அதிக வேலையால் வாழ்க்கையை இழந்தேன்: ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை | பிளாஷ்பேக்: நறுக் வசனத்தில் முதல் படம் | பிளாஷ்பேக்: முதல் படமே தோல்வி: துவண்டுபோன சவுகார் ஜானகி | பாலா நடித்த காந்திகண்ணாடி படம்: ம.கா.பா ஆனந்த், பிரியங்கா சொன்னது என்ன? | 50 ஆண்டு கொத்தடிமை,, தஞ்சை பின்னணியில் நடக்கும் கதை | மதராஸியை நம்பியிருக்கும் முருகதாஸ் | நடிப்பில் ஆர்வம் காண்பிக்கும் மிஷ்கின் | குருநாதர் பாக்யராஜ் சொன்ன அட்வைஸ்: சிஷ்யன் பாண்டியராஜன் நெகிழ்ச்சி | பிளாஷ்பேக்: ஜேம்ஸ்பாண்ட் நடிகராக ஜெய்சங்கர் ஜெயித்துக் காட்டிய “வல்லவன் ஒருவன்” |
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் கோட் படத்தின் இரண்டு அப்டேட்டுகள் நேற்று வெளியான நிலையில், விஜய் 69வது படம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால் நேற்று விஜய்யை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து சொல்லி இருக்கிறார் இயக்குனர் எச்.வினோத். அப்போது அவர்கள் இருவரும் 69வது படம் குறித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள்.
அதன்படி விஜய் 69வது படம் குறித்த அறிவிப்பை ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட்டு, அக்டோபர் மாதம் படப்பிடிப்பை தொடங்கலாம் என்று முடிவெடுத்துள்ளார்களாம். அதோடு அரசியல் கதையில் உருவாகும் அப்படத்தில் சில காட்சிகளில் விஜய், கரை வேஷ்டி கெட்டப்பில் தோன்றி நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.