மலையாள தேசத்தில் தமிழ் பாடும் குஜராத்தி... நடிகை சரண்யா ஆனந்த் | மெல்ல மெல்ல முன்னேறுவேன் : சஷ்டிகாவின் கனவு | எனக்குத் தெரிந்த அரசியல் இது தான்..! : பாலா பேட்டி | என் வாழ்வில் மாற்றம் ஏற்பட யார் காரணம்? : சிவகார்த்திகேயன் 'ஓப்பன் டாக்' | ஆலயமணி, சிவாஜி, பொன்னியின் செல்வன் 1 : ஞாயிறு திரைப்படங்கள் | ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! |
இசையமைப்பாளர் இளையராஜாவின் வாரிசு கார்த்திக் ராஜா. இவரும் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். தற்போது அவரது இசையில் மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படம் விரைவில் வெளிவர உள்ளது. இந்நிலையில் திருச்சியில் பிரமாண்ட இசை நிகழ்ச்சியை நடத்துகிறார். பொன்மாலை பொழுது என்ற பெயரில் நடக்கும் இந்த நிகழ்ச்சி வருகிற செப்., 24ல் திருச்சி மோரிஸ் சிட்டியில் நடக்க உள்ளது. இதில் இளையராஜா மற்றும் கார்த்திக் ராஜா இசையில் வெளியான பாடல்களை ரசிகர்களுக்கு இன்னிசை நிகழ்ச்சியாக விருந்து அளிக்க உள்ளனர்.
இதில் கார்த்திக் ராஜா உடன் ஹரிஹரன், உன்னி மேனன், சாதனா சர்கம், சிவாங்கி உட்பட பலர் கலந்து கொண்டு பாடுகின்றனர். இடையில் டான்ஸ் மாஸ்டர் கலாவின் நடன நிகழ்ச்சியும் நடக்க உள்ளது. இந்நிகழ்ச்சியை குஷ்பு தொகுத்து வழங்க உள்ளார். நடிகர் சதீஷ், தர்ஷா குப்தா உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்ச்சிக்காக கடந்த சில தினங்களாக சென்னையில் ஒத்திகை நிகழ்ச்சியும் நடக்கிறது. இந்நிகழ்ச்சியை தினமலர் இணைந்து வழங்குகிறது. டிக்கெட் முன்பதிவு மும்முரமாய் நடக்கிறது. டிக்கெட்டை புக் செய்யுங்கள், பொன்மாலை பொழுது-ல் இன்னிசையை ரசித்து மகிழுங்கள்.