பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் தயாரிப்பில், சுசீந்திரன் இயக்கி வரும் படம் வள்ளிமயில். விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்க, பரியா அப்துல்லா நாயகியாக நடிக்கிறார். பாரதிராஜா, சத்யராஜ், புஷ்பா படப்புகழ் சுனில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைக்கிறார். விஜய் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார்.
1980களில் நாடக கலையின் பின்னணியில் நடக்கும் டிராமா திரில்லராக இத்திரைப்படம் உருவாகிறது. 1980 காலகட்ட கதை என்பதால் திண்டுக்கல்லில் அந்த காலகட்ட பின்னணியை கொண்டு வரும் வகையில், 1 கோடி ரூபாய் செலவில் செட் அமைக்கப்பட்டு, இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது.
தற்போது சிறுமலை காட்டுப் பகுதியில் ஒரு பழமையான கோவில் ஷெட் அமைக்கப்பட்டு, படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. மும்பையை சேர்ந்த 50 ஸ்டண்ட் கலைஞர்களுடன் விஜய் ஆண்டனி, பரியா அப்துல்லா இந்த சண்டைக்காட்சியில் பங்கு கொண்டு நடித்து வருகின்றனர். பரியா அப்துல்லாவுக்கு தனியாக சண்டை பயிற்சி அளிக்கப்பட்டு அவர் இதில் பங்கேற்று வருகிறார். மாஸ்டர் ராஜசேகர் சண்டை காட்சிகளை இயக்குகிறார்.