'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
இன்றைய தேதியில் வேகமாக படம் எடுக்கும் இயக்குனர் சுசீந்திரன். தற்போது விஜய் ஆண்டனி நடிப்பில் அண்மையில் தொடங்கிய வள்ளி மயில் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்திருக்கிறார். நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் இதனை தயாரிக்கிறார். ப்ரியா அப்துல்லா கதாநாயகியாக நடிக்கிறார். சத்யராஜ், பாரதிராஜா, புஷ்பா படப்புகழ் சுனில், தம்பி ராமையா,ரெடின் கிங்ஸ்லி, ஜி.பி.முத்து ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைக்கிறார். விஜய் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார்.
1980களில் புகழ் பெற்று விளங்கிய நாடகமான 'வள்ளி திருமணம்' நாடகத்தை பின்புலமாகக் கொண்டு காமெடி ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகிறது. திண்டுக்கல்லில் 1980 காலக்கட்ட பின்னணிக்காக 1 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு, இப்படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டது. தற்போது முதல்கட்ட படிப்பிடிப்பு முடிந்திருக்கிறது.
விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கவுள்ளது. இதற்காக பழமையான சென்னையை கட்டமைக்கும், பிரம்மாண்டமான செட் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. சென்னையை தொடர்ந்து டில்லியில் மிக முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட உள்ளது.