ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மூத்த மகள் கதீஜாவுக்கும் இசைக் கலைஞர் ரியாஸ்தீன் ஷேக் முகமதுவுக்கும் கடந்த மே மாதம் 6ம் தேதி எளிமையான முறையில் நடந்தது. இதில் குடும்பத்தினர்களை மட்டும் அழைத்து நடத்தினார் ரஹ்மான்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சி அனைவரையும் அழைத்து நடத்தப்படும் என்று ஏ.ஆர்.ரஹ்மான் அறிவித்திருந்தார். அதன்படி நேற்று செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சொந்தமான ஏ.ஆர்.ஆர் பிலிம் சிட்டியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தனது மனைவி துர்காவுடன் கலந்துகொண்டு மணமக்களுக்கு பரிசாக மரக்கன்று பசுமைக்கூடையை வழங்கினார். பின்னர் இது குறித்து சமூக வலைதளப் பதிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளதாவது:
ஏ.ஆர்.ஆர். பிலிம் சிட்டியில் நடைபெற்ற, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா - ரியாஸ்தீன் ஷேக் முகமது ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று புதுமண இணையரை வாழ்த்தினேன். அன்புக்குரிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது உயிரோட்டமான இசையால் எல்லைகளையும், தடைகளையும் கடந்து மேலும் பல நெஞ்சங்களை ஆற்றவும் இணைக்கவும் வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மானின் குடும்பத்தினரான இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், நடிகர் ரகுமான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மேலும் திரையுலக பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர்.