ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் |
சென்னை: நிலம் வாங்கித் தருவதாக, நடிகர் சூரியிடம் பண மோசடி செய்தது தொடர்பாக, ஓய்வு பெற்ற டி.ஜி.பி., ரமேஷ் குடவாலாவின் வாக்குமூலத்தை, போலீசார் பதிவு செய்துள்ளனர்.
காவல் துறையில் டி.ஜி.பி.,யாக இருந்து ஓய்வு பெற்றவர் ரமேஷ் குடவாலா. இவர், வெண்ணிலா கபடி குழு உள்ளிட்ட படங்களில் நடித்த விஷ்ணு விஷாலின் தந்தை. இவரும், தயாரிப்பாளர் அன்புவேல் ராஜனும் நிலம் வாங்கித் தருவதாக 2.70 கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்து விட்டதாக நடிகர் சூரி, அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
ரமேஷ் குடவாலா, அன்புவேல் ராஜன் ஆகியோர் மீது, போலீசார் வழக்கு பதிந்தனர். வழக்கு விசாரணையில் முன்னேற்றம் இல்லை என சூரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. மேலும், துணை கமிஷனர் நிலையில் உள்ள அதிகாரி விசாரிக்க வேண்டும்; அதை, கூடுதல் கமிஷனர் கண்காணிக்க வேண்டும்; விசாரணையை ஆறு மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என கெடு விதித்தது.
இதையடுத்து, புகார்தாரரான சூரியிடம் பல மணி நேரம் விசாரித்து, 110 கேள்விகள் கேட்டு, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, விசாரணைக்கு ஆஜராகும்படி, ரமேஷ் குடவாலாவுக்கு, 'சம்மன்' அனுப்பினர். அதை ஏற்று, தன் மகனும், நடிகருமான விஷால் விஷ்ணுவுடன், ரமேஷ் குடவாலா, மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் முன் ஆஜரானார். பண மோசடி குறித்து அவரிடம் விசாரணை நடத்தி, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. விஷ்ணு விஷாலிடமும் விசாரணைநடந்ததாக கூறப்படுகிறது.