2025 - வசூல் படங்களில் முதலிடத்தைப் பிடிக்குமா 'காந்தாரா சாப்டர் 1' ? | விஷால் - சுந்தர் சி கூட்டணி படத்தின் அறிவிப்பு… விரைவில்… | மனிஷாவுக்கு கை கொடுக்குமா 'மெஸன்ஜர்' | பிளாஷ்பேக் : 'ஷோலே' படத்தை தழுவி உருவான 'முரட்டு கரங்கள்' | பிளாஷ்பேக்: காப்பி ரைட் வழக்கில் சிக்கிய சிவாஜி படம் | இந்தியா, ஆசியான் திரைப்பட விழா: சென்னையில் தொடங்கியது | முதல் நாள் வசூலில் முந்தும் 'டியூட்' | அஜித் 64 : தீபாவளி அறிவிப்பு? | சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் |
துல்கர் சல்மான், அதிதிராவ், காஜல் அகர்வால் நடித்த ஹேய் சினாமிகா படத்தை இயக்கிய நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர் அடுத்து தூத்துக்குடியை கதை களமாக கொண்ட படத்தை இயக்கி வருகிறார். இதற்கு தக்ஸ் என்று பெயரிட்டுள்ளார். கூட்டாக கொலை கொள்ளைகளில் ஈடுபடுகிறவர்களை தக்ஸ் என்று அழைப்பாளர்கள். அதனையே படத்திற்கு தலைப்பாக வைத்திருக்கிறார் பிருந்தா.
இந்த படத்தில் மும்பைகார் எனும் ஹிந்தி படத்தில் நடித்த ஹிர்ருது ஹாரூன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிம்ஹா, ஆர். கே. சுரேஷ், முனீஸ்காந்த், அப்பாணி சரத், அனஸ்வரா ராஜன் , ரம்யா சங்கர் உள்பட பலர் நடிக்கிறார்கள். இவர்களுடன் தூத்துக்குடியை சேர்ந்த சில மண்ணின் மைந்தர்கள் நடிக்கிறார்கள். காரணம் கதையின் களம் தூத்துக்குடி.
பிரியேஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைக்கிறார். தமிழுடன் தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தை ஹெச் ஆர் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிக்கிறார்.