'கைதி 2' : கார்த்தி சொன்னதைச் செய்வாரா லோகேஷ் கனகராஜ் ? | இந்தியாவே எனது வீடு : சர்ச்சைக்கு ஏஆர் ரஹ்மான் விளக்கம் | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'தளபதி கச்சேரி' | 2025ம் ஆண்டின் கடைசி வெற்றிப் படம் 'சிறை' - 25வது நாளில்… | வெகுளியாகப் பேசிவிட்டேன் : ஜீவா தந்த விளக்கம் | கவின் 9வது படத்தில் இணைந்த சாண்டி! | மீசைய முறுக்கு 2ம் பாகம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | மகாராஜா இரண்டாம் பாகம் உருவாகிறது! | உறவினரை ஹீரோவாக மாற்றி அழகு பார்க்கும் கார்த்திக் சுப்பராஜ்! | மூன்றாவது முறையாக இணையும் சூர்யா, பாண்டிராஜ் கூட்டணி! |

திரையரங்குளில் திரைப்படங்கள் திரையிடப்படும்போது புகைபிடிக்கும் காட்சியோ, மது அருந்தும் காட்சியோ வரும்போது திரையின் இடது ஓரத்தில் எச்சரிக்கை வாசகம் இடம்பெறுவது வழக்கத்தில் இருக்கிறது.
இதேபோன்று சண்டை காட்சிகள் வரும்போதும், ரத்தம் காட்டப்படும்போது. இந்த காட்சிகளில் வரும் ஆயுதங்கள் காகித அட்டையில் செய்யப்பட்டவை, ரத்தம் வெறும் கலர்பொடி என்ற வாசகம் இடம் பெற வேண்டும் என்று கூறி வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் அடங்கிய பென்ஞ் "தகுந்த ஆதாரம் இன்றி பொதுநல வழக்கு தொடரக்கூடாது. அதுவும் வழக்கறிஞர்கள் பொதுநல வழக்கு தொடரக்கூடாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனவே மனுதாரருக்கு அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்கிறோம்" என்று தெரிவித்தனர். இதை தொடர்ந்து மனுவை திரும்ப பெற்றுக் கொள்வதாக வழக்கறிஞர் கேட்டுக் கொண்டதை தொடர்ந்து மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.




