நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

ஹிந்தித் திரையுலகத்தின் முன்னணி நடிகையான கத்ரினா கைப், நடிகரான விக்கி கவுஷல் இருவரும் காதலித்து 2021ல் திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் தற்போது தங்களது முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என செய்திகள் வெளியாகி உள்ளது. அடுத்த மாதம் அக்டோபர் அல்லது நவம்பரில் டெலிவரி இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.
இது பற்றி சமீபத்தில் 'பேட் நியூஸ்' பட நிகழ்ச்சியில் அவரிடம் கேட்ட போது, “நல்ல செய்தியை உங்களிடம் பகிர்வது எங்களுக்கு மகிழ்ச்சிதான், ஆனால் தற்போது சுற்றி வரும் யூகங்களில் எதுவும் உண்மையில்லை,” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே கத்ரினா கைப் அதிகமாக வெளியில் வருவதில்லை என்பதால் இந்த சந்தேகம் வலுத்துள்ளது. கத்ரினா கடைசியாக 2024ல் ஹிந்தி, தமிழில் வெளிவந்த 'மெர்ரி கிறிஸ்துமஸ்' படத்தில் நடித்தார். அதன்பின் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை.