பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

பிரபல சமையல் நிபுணர் மாதம்பட்டி ரங்கராஜ். இவர், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக, ஆடை வடிவமைப்பு நிபுணர் ஜாய் கிரிசில்டா புகார் அளித்திருந்தார். ஜாய் கிரிசில்டா கருவுற்ற நிலையில், அவரிடம் இருந்து மாதம்பட்டி ரங்கராஜ் விலகினார். இதையடுத்து, சமூக வலைதளத்தில் ரங்கராஜுக்கு எதிராக கருத்துகளை பதிவிட்டிருந்தார். அவற்றை நீக்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ரங்கராஜ் தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், கர்ப்பிணியாக உள்ள தனக்கு பராமரிப்பு செலவு தொகை கோரி, சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் ஜாய் கிரிசில்டா மனு தாக்கல் செய்து உள்ளார். அதில், 'நிறைமாத கர்ப்பிணியாக உள்ளதால், ஆடை வடிவமைப்பில் ஈடுபட முடியவில்லை. எனக்கும், என் வயிற்றில் உள்ள குழந்தைக்கும், ஒவ்வொரு மாதமும் பராமரிப்பு செலவு தொகையை, மாதம்பட்டி ரங்கராஜ் வழங்க உத்தரவிட வேண்டும். என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை. மருத்துவம், வீட்டு வாடகை மற்றும் இதர செலவுகளுக்காக, மாதம், 6.50 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், ஜாய் கிரிசில்டாவுக்கு இன்று குழந்தை பிறந்துள்ளது. தனக்கும் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் ஆண் குழந்தை பிறந்திருப்பதாக ஜாய் கிரிசில்டா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.