கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? |
வெங்கட் பிரபு இயக்கும் நேரடி தெலுங்கு படத்தில் நாக சைதன்யா நடிக்கிறார். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. தமிழிலும் இந்த படம் தயாராவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நாகசைதன்யா ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். உப்பன்னா, ஷியாம் சிங்காராய், பங்கார்ராஜு, தி வாரியர் படங்களில் நடித்த கீர்த்தி ஷெட்டி அடுத்தாக இந்த படத்தில் நடிக்கிறார். தமிழில் தற்போது வணங்கான் படத்தில் நடித்து வருகிறார்.
இளையராஜாவும், யுவன் சங்கர்ராஜாவும் இணைந்து இந்த படத்திற்கு இசை அமைக்கிறார்கள். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் சார்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கிறார். இன்று முதல் இதன் படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் தொடங்கியது.