பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

கோடியில் ஒருவன் படத்தை அடுத்து தமிழரசன், அக்னிச்சிறகுகள் , காக்கி, பிச்சைக்காரன்-2, மழை பிடிக்காத மனிதன் என பல படங்களில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. இந்த நிலையில் சுசீந்திரன் இயக்கத்தில் நல்லுசாமி பிக்சர்ஸ் தயாரிப்பில் அவர் நடித்துள்ள வள்ளிமயில் என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மொழிகளில் இந்த போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் சத்யராஜ், இயக்குனர் பாரதிராஜா, ரெடின் கிங்ஸ்லே ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நாடக கலையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருகிறது. சமீபத்தில் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது. விரைவில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்க உள்ளது.




