ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா' | ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' |

நெல்சன் இயக்கும் படங்களில் காமெடியன் ரெடின் கிங்ஸ்லே தொடர்ந்து இடம் பெற்று வருகிறார். அவர் அளித்த ஒரு பேட்டியில், அடுத்து ரஜினியை வைத்து நெல்சன் இயக்கும் படத்தில் நீங்கள் நடிக்கிறீர்களா? என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், ரஜினியின் 169வது படத்திற்காக ஸ்கிரிப்ட் எழுதும் பணியில் நெல்சன் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். தற்போது முதல் பாதிதான் எழுதி முடித்திருக்கிறார். முக்கியமாக ரஜினி படம் என்பதால் வெறித்தனமாக இந்த ஸ்கிரிப்டை உருவாக்கி வருகிறார் நெல்சன். மேலும் மொத்த கதையும் எழுதி முடிந்த பிறகுதான் எந்த கேரக்டரில் யாரை நடிக்க வைப்பது என்று அவர் முடிவு செய்வார். அதனால் கதை வேலைகள் முடிந்த பிறகுதான் ரஜினி படத்தில் நான் இருக்கிறேனா, இல்லையா என்பது தெரியவரும் என்று கூறி இருக்கிறார் ரெடின் கிங்ஸ்லே. தற்போது வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் மற்றும் காபி வித் காதல் உள்பட பல படங்களில் காமெடி வேடங்களில் இவர் நடித்து வருகிறார்.




