'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
இந்திய சினிமாவையும், போதை பொருளையும் பிரிக்க முடியாது என்கிற அளவிற்கு சினிமாவுக்கும், போதை பழக்கத்துக்கும் நெருக்கம் இருப்பது வெட்டவெளிச்சமாகி இருகிறது. வட இந்திய சினிமாவில் ரியா சக்ரவர்த்தி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தென் இந்தியாவில் ராகினி திரிவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட பலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தற்போது மேலும் ஒரு தெலுங்கு நடிகை கைது செய்யப்பட்டிருக்கிறார்.
மும்பை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு மும்பையில் உள்ள பல நட்சத்திர ஓட்டல்களில் போதை பொருள் புழக்கம் தாராளமாக நடப்பதாக தகவல் வந்தது. இதை தொடர்ந்து போலீசார் நட்சத்திர ஓட்டலில் சோதனை நடத்தியபோது கணிசமான போதை பொருட்களுடன் பெண் ஒருவர் சிக்கினார். அவர் அங்குள்ள விவிஐபிக்களுக்கு சப்ளை செய்வதற்காக வந்தவர் என்றும் தெரிந்தது.
போலீசார் அவரிடம் விசாரித்ததில் அவரது பெயர் சுவேதா குமாரி என்பதும், அவர் ரிங் மாஸ்டர் என்ற கன்னடப் படத்திலும், தெலுங்கில் 10க்கும் மேற்பட்ட படங்களில் 2வது நாயகியாக நடித்திருப்பதும் தெரிய வந்தது. சுவேதாவிடம் இருந்து 10 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தெலுங்கு பட உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.