ரசிகர்கள் கிண்டல் : மன்னிப்பு கேட்ட 'வார் 2' வினியோகஸ்தர் | 'லியோ' மொத்த வசூல் 220 கோடி மட்டும் தானா? | செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு |
ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் பவன் கல்யாண், நிதி அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ள 'ஹரிஹர வீரமல்லு' படத்தின் டிரைலர் இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியானது. 24 மணி நேரத்தில் அதிக பார்வைகளைப் பெற்ற தெலுங்கு டிரைலர் என்ற புதிய சாதனையைப் பெற்றது. அந்த ஒரு மொழியில் மட்டும் 49 மில்லியன் பார்வைகளைக் கடந்து 50 மில்லியனை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
மற்ற மொழிகளில் ஹிந்தியில் 7 மில்லியன், தமிழில் 3 மில்லியன், கன்னடத்தில் ஒரு மில்லியன், மலையாளத்தில் 5 லட்சம் பார்வைகளைப் பெற்று மொத்தமாக 60 மில்லியனைக் கடந்துள்ளது.
17ம் நூற்றாண்டில் முகாலயர்களின் ஆட்சியில் நடைபெற்ற கொடுமைகள், இந்துக்கள் மீதான வன்மம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படம் டிரைலர் வெளியான பின் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிரைலரில் இடம் பெற்றுள்ள வாசங்களான, “ஒரு இந்துவா வாழவே வரி செலுத்திய காலம், இந்த நாட்டோட உழைப்பு பாட்ஷாவின் காலடியில் நசுக்கப்பட்ட காலம், ஒரு உண்மையான போர் வீரனோட எழுச்சிக்காக இயற்கையே காத்திருந்த காலம், தர்மத்தின் பயணம் ஆரம்பம்,” ஆகியவை தெலுங்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.