விஜய் நடித்த 'உன்னை நினைத்து' காட்சிகளைப் பகிர்ந்த விக்ரமன் | ஜன.,10க்கு தள்ளிப்போகிறதா 'ஜனநாயகன்'? | 'அகண்டா 2' மாதிரி ஆகிடுமா ஜனநாயகன் | ஜனவரி 30ல் வெளியாகும் ஜீத்து ஜோசப் படம் | நஷ்டமடைந்த 'ஏஜென்ட்' பட தயாரிப்பாளர், வினியோகஸ்தர்களுக்கு அகில் கொடுத்த வாக்குறுதி | ஆயிரம் படங்களில் நடித்த மூத்த மலையாள நடிகர் காலமானார் | 'மன சங்கர வர பிரசாத் காரு' படத்தின் மெகா புரமோஷனில் சிரஞ்சீவி கலந்து கொள்வாரா? | மூன்று வருடங்களுக்குப் பிறகு விஜய் பட நடிகையிடம் மன்னிப்பு கேட்ட புஷ்பா நடிகை | மீண்டும் சந்தித்த 'படையப்பா' படை | திரைப்பட பாடலாக உருவான சீமானின் மேடை பாட்டு |

ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண், துணை முதல்வராகப் பதவியேற்பதற்கு முன் மூன்று தெலுங்குப் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். 'ஹரிஹர வீர மல்லு, ஓஜி' ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்புகள் அப்போது நடந்து வந்தது. கடந்த வருடம் சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு அப்படங்களில் நடிப்பதைத் தள்ளிப் போட்டார்.
பின்னர் 'ஹரிஹர வீர மல்லு' படத்தில் கலந்து கொண்டு நடித்தார். பிறகு அரசுப் பணிகள் நிறைய இருந்ததால் படப்பிடிப்பை மீண்டும் தள்ளி வைத்தார். அவர் சில நாட்கள் நடித்துக் கொடுத்தால் படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்ற நிலை இருந்தது. இன்று முதல் அப்படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடிக்க ஆரம்பித்துள்ளார். இன்னும் நான்கைந்து நாட்கள் படப்பிடிப்பு நடக்க உள்ளதாகத் தெரிகிறது. அத்துடன் படப்பிடிப்பு முடிவடைவதால் படத்தை மாதக் கடைசியில் வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.
இப்படத்தை ஏற்கெனவே மே 9 வெளியீடு என அறிவித்திருந்தார்கள். இப்படத்தை முடித்த பிறகு அவர் 'ஓஜி' படத்தில் நடிக்கத் தேதி கொடுக்க வேண்டும். கடந்த இரண்டு வருடங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு நின்று நின்று நடந்து வருகிறது. அவர் 25 நாள் தேதி தந்தால் படத்தை முடித்துவிடுவார்களாம். அது விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால் 'ஓஜி' படமும் இந்த வருடத்தில் வெளியாகிவிடும்.