இளையராஜா பேரன் யதீஷ்வரின் இசை ஆல்பம் : ரஜினி, கமல் வெளியிட்டனர் | மம்முட்டி மோகன்லாலின் 'பேட்ரியாட்' டீசர் வெளியானது ; ரசிகர்களுக்கு ட்ரீட் உறுதி | திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ் | ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும் அஜித்குமார்! | 'மன சங்கர வர பிரசாத் கரு' படத்தின் நயன்தாரா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்! | இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா? | விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான் | டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் |
ஹிந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடித்து கடந்த 2019ம் ஆண்டு வெளியான படம் வார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கடந்த வருடத்திலிருந்து வார் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் ஹிருத்திக் ரோஷனுக்கு வில்லனாக தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடித்துள்ளார்.
யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை அயன் முகர்ஜி இயக்கியுள்ளார். வரும் ஆகஸ்ட் 14ம் தேதியன்று படம் திரைக்கு வருகிறது. தற்போது இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியில் ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இருவரும் இணைந்து நடனமாடி உள்ளனர். இருவருமே நன்றாக ஆடக் கூடியவர்கள் என்பதால் போட்டி போட்டு நடனமாடி உள்ளனர்.