நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

பழம்பெரும் கன்னட நடிகர் மகாதேவப்பா. 1970ல் இருந்து 1990 வரைக்கும், கன்னடத்தில் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மகாதேவப்பா நடித்த சங்கர் குரு, கவிரத்னா காளிதாசா, குரு பிரம்மா ஆகிய படங்கள் பெரிய வெற்றி பெற்றன. கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாருடன் இணைந்து 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.
88 வயதான மகாதேவப்பா பெங்களூரில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். முதுமையின் காரணமாக உடல்நல பிரச்சினைகளில் இருந்து வந்த அவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் மரணம் அடைந்தார்.
மகாதேவப்பாவுக்கு மனைவியும், மகனும், மகளும் உள்ளனர். அவரது மறைவுக்கு கன்னட நடிகர் நடிகைகள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். சிவராஜ்குமார் விடுதுள்ள இரங்கல் செய்தியில் "எனது தந்தையின் ஆருயிர் நண்பர், அவருடன் பல படங்களில் நடித்தவர் இறந்தது. எனது தந்தை இறந்தது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது" என்று கூறியிருக்கிறார்.