தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

மலையாளத்தில் பிரித்விராஜ் நடிப்பில் உருவாகும் 'குருதி' படம் இப்போதுதான் ஆரம்பித்தது போல இருக்கிறது.. ஆனால் டிச-9ல் ஆரம்பித்த இந்தப்படத்தை கிட்டத்தட்ட 23 நாட்களில் முடித்து ஆச்சர்யப்படுத்தி உள்ளனர் குருதி படக்குழுவினர். குறிப்பாக இந்தப்படத்தில் நடித்தது மட்டுமல்லாமல், படத்தின் தயாரிப்பாளராகவும் தனது ஆச்சர்யத்தையும் சந்தோஷத்தையும் வெளிப்படுத்தியுள்ளார் பிரித்விராஜ்.
இதுபற்றி அவர் கூறும்போது, “எனது இந்த இருபது வருட பயணத்தில், நூறு படங்களில் நடித்துள்ள அனுபவத்தில், 'குருதி' படம் தான் மிகவும் துரிதமாக எடுக்கப்பட்ட படம் என உறுதியாக கூறுவேன். இத்தனைக்கும் இந்தப்படத்தில் பாடல்கள், சண்டை காட்சிகள், காட்டிற்குள் சேசிங் காட்சிகள் என அனைத்து அம்சங்களும் நிறைந்திருக்கின்றன. படக்குழுவினரின் ஒத்துழைப்பும் சக நடிகர்களின் அர்ப்பணிப்பும் தான் இந்தப்படத்தை விரைவில் முடிக்க உதவின. ஒரு தயாரிப்பாளராக மட்டுமல்ல, ஒரு நடிகராக சிறந்த நடிப்பையும் வெளிப்படுத்த உதவியுள்ளது இந்த குருதி” என கூறியுள்ளார் பிரித்விராஜ்.




