பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழக ரசிகர்களை தனது கவர்ச்சியால் அபிசேகம் செய்து வந்தவர் மும்தாஜ். அவரது கட்டுக்கடங்காத கவர்ச்சி ஆட்டம் பல படங்களின் வியாபாரத்தையே தீர்மானித்து வந்தது. நாளாக நாளாக அவருக்கிருந்த மவுசு குறையத் தொடங்கியது. அதோடு மும்தாஜ் நடித்து வந்த சில படங்களும் கிடப்பில் போடப்பட்டதால், அதைத் தொடர்ந்து தமிழில் இனி காலம் தள்ள முடியாது என்று மலையாள சினிமாவில் தஞ்சம் புகுந்தார். அங்கு மோகன்லால் நடித்த தாண்டவம் உள்பட சில படங்களில் நடித்தார். ஆனால் அந்த படங்களும் மும்தாஜ்க்கு கைகொடுக்கவில்லை. அதனால் அங்கிருந்து திரும்பியவர் சின்னத்திரைகளில் முகம் காட்டி வந்தார்.
இந்த சமயத்தில்தான் மலையாளத்தில் இருந்து ப்ரிவியூ என்ற படத்தில் நடிப்பதற்கு மும்தாஜ்க்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். இதனால் இன்ப அதிர்ச்சியடைந்த அவர் ஓடோடிச்சென்று அந்த வாய்ப்பை லபக்கி விட்டார். இதே படத்தில் இன்னொரு நாயகியாக லட்சுமிராயும் திறமை காட்டுகிறார் என்பதால், அவரை ஓரங்கட்டுவதற்காக கவர்ச்சி வசியம் செய்யப்போகிறாராம் மும்தாஜ். அதற்காக பெருத்த தனது உடம்பை ஆயுர்வேத மசாஜ்கள் மூலம் ஸ்லிம்மாக்கும் தீவிர முயற்சிகளிலும் இறங்கியிரக்கிறார் மலமல மும்தாஜ்.