'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
டிஜிட்டலில் திரைப்படங்களைத் தியேட்டர்களில் திரையிட வி.பி.எப் என்ற கட்டணத்தைத் தயாரிப்பாளர்கள் செலுத்த வேண்டும். அப்படி கட்டணம் செலுத்தினால் மட்டுமே அந்தப் படங்கள் தியேட்டர்களில் திரையிடப்படும். சில தனியார் நிறுவனங்கள் அந்த விபிஎப் கட்டணத்தை அதிகமாக வாங்குவதால் சொந்தமாகவே ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தது மலையாள தயாரிப்பாளர் சங்கம்.
அதன்படி அவர்களது 'பிடிசி' என்ற நிறுவனம் மூலம் தியேட்டர்களுக்குத் தேவையான 'கன்டென்ட்'களை வாங்கிக் கொள்ள அறிவுறுத்தியது. ஆனால், இந்த புதிய முறைக்கு பிரபல மல்டிபிளக்ஸ் நிறுவனமான பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனம் சம்மதிக்கவில்லை. கியூப், யுஎப்ஓ ஆகிய நிறுவனங்களுடன் தாங்கள் ஏற்கெனவே போட்டுக் கொண்ட ஒப்பந்தப்படி மட்டுமே செயல்படுவோம் என்றது.
அதுமட்டுமல்லாமல் சில நாட்களுக்கு முன் அவர்களது தியேட்டர்களில் மலையாளப் படங்களைத் திரையிடுவதையும் நிறுத்தியது. இந்த விவகாரம் விஸ்வரூபமாக உருவெடுத்தது. எதிர்காலத்தில் பிவிஆர் நிறுவனத்திற்கு மலையாளப் படங்களைத் தர மாட்டோம் என மலையாளத் திரையுலகக் கூட்டமைப்பு அறிவித்தது.
இதைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பிவிஆர் நிறுவனம் மலையாளப் படங்களை தொடர்ந்து திரையிட சம்மதம் தெரிவித்தது. புதிதாக திறக்கப்படும் தியேட்டர்களில் மலையாள தயாரிப்பாளர் சங்கத்தின் 'பிடிசி' மூலம் 'கன்டென்ட்'களை வாங்கிக் கொள்ளவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு பிவிஆர் தியேட்டர்களில் நிறுத்தப்பட்ட மலையாளப் படக் காட்சிகள் இன்று முதல் நடைபெற உள்ளது.