100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? |
ராஜ்குமார் ராவ், வாமிகா கபி மற்றும் பலர் நடிப்பில் நேற்று முன்தினம் வெளியாக வேண்டிய ஹிந்தித் திரைப்படம் 'பூல் சக் மாப்'. இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதட்டம் இருந்ததால் படம் பார்க்க வரும் ரசிகர்களின் நலன் கருதி படத்தை தியேட்டர்களில் வெளியிடுவதை நிறுத்துவதாக அறிவித்தது தயாரிப்பு நிறுவனமான மேட்டாக் பிலிம்ஸ். அதற்குப் பதிலாக அடுத்த வாரம் மே 16ம் தேதி இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிடுகிறோம் என்று அறிவித்தார்கள்.
இப்படத்திற்கான முன்பதிவுகள் ஆன்லைன் தளங்களில் நடைபெற்று வந்த நிலையில் தயாரிப்பு நிறுவனத்தின் இந்த அறிவிப்பு இந்தியாவின் முன்னணி மல்டிபிளக்ஸ் பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனத்திற்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இப்படத்தைத் தியேட்டர்களில் வெளியிடுவதற்காக சுமார் 60 கோடி வரை புரமோஷன் செலவு செய்துள்ளோம்.
டிரைலர்களை இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான தியேட்டர்களில் திரையிட்டது, சமூக வலைதள புரமோஷன், போஸ்டர், பேனர்கள், ஸ்டான்டிஸ் உள்ளிட்டவற்றிற்காக செலவு செய்யப்பட்ட தொகைதான் அந்த 60 கோடி என்றும் அந்த நஷ்டத்தை சரி செய்ய வேண்டும் என்றும் மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
அவ்வளவு தொகை என்பது அதிகபட்ச தொகை, படத்தின் தயாரிப்பாளரே இப்படத்தின் புரமோஷனுக்காக 25 கோடிதான் ஒதுக்கியிருந்தார் என்றும் படக்குழு சார்பாக தகவல் வெளியாகி உள்ளது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தை ஓடிடி தளத்தில் 8 வாரங்களுக்கு வாரம் வெளியிட தடை விதித்து வழக்கை ஜுன் 16ம் தேதிக்குத் தள்ளி வைத்துள்ளது.