விடாமுயற்சி டிரைலர் வெளியானது ; ஆக்ஷனில் அதகளம் பண்ணும் அஜித் : பிப்., 6ல் படம் ரிலீஸ் | ஹாலிவுட் வெப் தொடரில் நடிக்கும் திஷா பதானி | பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாகும் மமிதா பைஜூ | சைந்தவி உடன் இணைந்து பணியாற்றுவது ஏன்? - ஜி.வி.பிரகாஷ் சொன்ன பதில் | இரும்புக்கை மாயாவி படத்தில் நடிக்கும் அமீர்கான்? | விஜய்க்கு சொன்ன மூன்று கதை : மகிழ் திருமேனி | சூப்பர் ஹீரோ கதையில் சூர்யா | ஸ்ருதிஹாசன் குரலில் வெளிவந்த டிரெயின் முன்னோட்டம் | டிராகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | 10 வருட பயணத்தை நினைவுகூர்ந்த ஆதி |
நேற்று முன்தினம் ஷார்ஜாவில் 43வது சார்ஜா சர்வதேச புத்தகத் திருவிழா கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக இசைஞானி இளையராஜா கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் ‛ஒரு இசை ஜாம்பவானின் பயணம்; இளையராஜாவின் இசைப்பயணம்' என்கிற தலைப்பில் அங்கே வந்திருந்த ரசிகர்களுடன் இளையராஜா கலந்துரையாடும் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய இளையராஜா ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது ஒருவர் ஏன் நீங்கள் அதிகம் மலையாள படங்களுக்கு இசையமைப்பதில்லை என்கிற கேள்வியை எழுப்பினார். அதற்கு இளையராஜா சொன்ன பதில் ரொம்பவே புதிதாகவும் வித்தியாசமாகவும் இருந்தது.
இது குறித்து அவர் பேசும்போது, “எனக்கும் மலையாள படங்களில் இசையமைக்க ஆசைதான். ஆனால் மலையாளிகளைப் பொறுத்தவரை வீட்டிற்கு ஒரு இசையமைப்பாளராவது இருக்கிறார்கள். அவர்கள் ஏற்கனவே அங்கே இசையை உருவாக்க துவங்கி விட்டார்கள். ஒருவேளை இதனால் தான் என்னை மலையாள திரையுலகினர் அழைக்கவில்லையோ என்னவோ..? இப்போதும் மலையாள திரைப்படங்களுக்கு இசையமைக்க அழைத்தால் நிச்சயமாக நான் தயாராக இருக்கிறேன்” என்று கூறினார்.
இளையராஜா அறிமுகமான அந்த காலகட்டத்தில் 1978லேயே ‛வியாமோகம்' என்கிற படத்திற்கு இசையமைத்ததின் மூலமாக மலையாள திரை உலகில் நுழைந்தார். அதன் பிறகு ‛யாத்ரா, மை டியர் குட்டிச்சாத்தான்' உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைத்தார் என்றாலும் அதன் பிறகு அவர் தமிழில் பிஸியான இசையமைப்பாளராக மாறியதால் மலையாளத்தில் அவரால் தொடர்ந்து பயணிக்க இயலவில்லை என்பது தான் உண்மை. ஆனாலும் பெரும்பாலான மலையாள படங்களில் அவரது தமிழ் பட பாடல்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதற்கு சமீபத்திய உதாரணம் மிகப்பெரிய வெற்றி பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் படத்தில் இடம்பெற்ற கண்மணி அன்போடு பாடலும் அந்த பாடலால் அந்த படத்திற்கு கிடைத்த வெற்றியும் தான்.