சூர்யா 45வது படத்தில் இருந்து வெளியேறிய ஏ.ஆர்.ரஹ்மான்! புதிய இசையமைப்பாளர் ஒப்பந்தம்! | விஜய் வாயில் சர்க்கரை போடுவேன்! நடிகை கஸ்தூரி வெளியிட்ட பரபரப்பு தகவல் | பிளாஷ்பேக்: ரஜினி விரும்பிய கதையில் நடித்த சிவாஜி | புஷ்பா 2 - நான்கு நாட்களில் 800 கோடி வசூல் | பிளாஷ்பேக்: சிகரெட் புகைத்த நாயகி | 'மெட்ராஸ்காரன்' படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல் | பிளாஷ்பேக்: அண்ணன் தங்கை பாசம் பேசி, அழியா புகழ் வசனகர்த்தாவான ஆரூர் தாஸ் | சூர்யா 45 படத்திலிருந்து ஏஆர் ரஹ்மான் விலகல் | சோஷியல் மீடியா ட்ரோலில் பாதிக்கப்படுவது நடிகைகள் தான் - வாணி போஜன் | மீண்டும் சீரியலில் 'மோதலும் காதலும்' சமீர்! |
தமிழில் சூர்யா நடிப்பில் இயக்கிய ‛சூரரைபோற்று' படத்தை ஹிந்தியில் ‛சர்பிரா' என்ற பெயரில் அக்ஷய் குமாரை வைத்து ரீமேக் செய்தார் சுதா கொங்கரா. அதன்பிறகு சூர்யா நடிப்பில் ‛புறநானூறு' படத்தை இயக்க திட்டமிட்டார். ஆனால் சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்க சென்று விட்டதால் அந்த கதையை சிவகார்த்திகேயன் இடத்தில் சொல்லி ஓகே பண்ணி இருந்தார் சுதா. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தம்பியாக ஒரு நெகட்டீவ் ரோலில் இயக்குனர் லோகேஷ் கனகராஜை நடிக்க வைக்க முயற்சி எடுத்தார். ஆனால் அவர் படம் இயக்குவதில் பிசியாக இருப்பதாக மறுத்து விடவே அதன் பிறகு அந்த வேடத்தில் அதர்வா நடிப்பதாக கூறப்பட்டது.
இப்போது அமரன் படத்தின் மெகா ஹிட்டுக்குப் பிறகு புறநானூறு பிரமாண்டமாக இயக்க திட்டமிட்டு வரும் சுதா, அப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் மோதும் வில்லனாக ஒரு முன்னணி ஹீரோவை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார் . அதற்காக மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் நிவின் பாலியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
அதோடு இந்த புறநானூறு படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் பான் இந்தியா படமாக இயக்குகிறார் சுதா கொங்கரா.