இப்போதே புரமோஷனை ஆரம்பித்த 'வாரணாசி' படக்குழு | 'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி | தமிழுக்கு வரும் துளு நடிகை | பிளாஷ்பேக் : மம்முட்டி கேரக்டரில் நடித்த சிவகுமார் | பிளாஷ்பேக் : வாய்ப்புக்காக பிச்சைக்காரர் தோற்றத்திற்கு மாறிய ஜெமினி கணேசன் | இந்த வாரமும் ஐந்திற்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் | காந்தாரா பாணியில் உருவாகும் 'கரிகாடன்' | அனுமனை இழிவுபடுத்தி விட்டார் : ராஜமவுலி மீது போலீசில் புகார் |

கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் போன்ற படங்களை இயக்கியவர் நெல்சன் திலீப்குமார். இவர் அடுத்தபடியாக மீண்டும் ரஜினியை வைத்து ஜெயிலர்-2 படத்தை இயக்குவதற்கு தயாராகி வருகிறார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடித்து வரும் ரஜினி, அதன்பிறகு ஜெயிலர்-2 படத்தில் நடிக்கிறார். அந்தப் படத்தை முடித்ததும் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ஒரு பான் இந்தியா படத்தை இயக்கப் போகிறார் நெல்சன். ஜூனியர் என்டிஆரிடத்தில் கதை சொல்லி ஓகே செய்துவிட்ட அவர், அப்படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளிலும் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.