நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த திரைப்படம் 'ஜெயிலர்'. இப்படம் உலகளவில் ரூ.600 கோடிக்கு மேல் வசூலித்து வசூல் சாதனையை ஈட்டியது.
ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு கடந்த பல மாதங்களாக பல கட்டமாக நடைபெற்று வருகிறது. முதல் பாகத்தில் இடம்பெற்ற ரம்யா கிருஷ்ணன், மிர்ணா உள்ளிட்டோர் இணைந்து இந்த பாகத்திலும் நடித்து வருகின்றனர். இவர்கள் அல்லாமல் முதல் பாகத்தில் கேமியோ ரோலில் சிவராஜ் குமார் மற்றும் மோகன்லால் நடித்தனர். இவர்களும் இந்த பாகத்திலும் தொடர்கின்றனர்.
இவர்கள் அல்லாமல் இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா, பாலிவுட் நடிகை வித்யா பாலன் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி நடித்து வருகின்றார் என படக்குழு வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். இவர் ஹிந்தி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் மற்றும் தமிழில் 'யாகாவாராயினும் நாகாக்க' படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.