துரந்தர் 2 : படம் பார்க்காமல் பாராட்டிய ஆமிர்கான் | சான்வே மேக்னாவின் புதிய படம் | பிளாஷ்பேக்: இளையராஜாவின் ஆல்பம் இசையை பின்னணி இசையாக பயன்படுத்திய பாலுமகேந்திரா | பிளாஷ்பேக் : கடைசி வரை கஷ்டத்தில் வாழ்ந்த புஷ்பவல்லி | நிறைய சுமைகளை சுமக்காதீர்கள் : சமுத்திரகனி அட்வைஸ் | ‛நூறு சாமி' படக் கதை குறித்து பகிர்ந்த சசி | முத்து என்கிற காட்டானுக்கு பின்னால் நடந்ததையும் வெப் தொடராக எடுக்கலாம் : விஜய் சேதுபதி | ஓடிடியில் வரவேற்பைப் பெற்ற 'மேட் இன் கொரியா' | துரந்தர் : இரண்டு பாகங்களிலும் 1000 கோடி வசூலித்த முதல் இந்தியத் திரைப்படம் | பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா |

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற 'ஜெயிலர்' படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. முதல் பாகத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்த ரம்யா கிருஷ்ணன், ரஜினியின் மருமகளாக நடித்த மிர்னா மேனன் உள்ளிட்டோர் இந்த படத்திலும் தொடர்கிறார்கள். 'ஜெயிலர் 2' திரைப்படம் எப்படி வந்திருக்கிறது என்பது குறித்து எதிர்பார்ப்பு ரசிகர்கள் பலரிடமும் எழுந்திருக்கிறது.
இந்த நிலையில் சமீபத்திய கல்லூரி நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட மிர்னா மேனன், ஜெயிலர் 2 பற்றி கூறும்போது, “ஜெயிலர் முதல் பாகத்தில் இடம் பெற்ற இண்டர்வல் காட்சியை பார்த்த போது இப்படி ஒரு இன்டர்வல் காட்சி வந்ததே இல்லை என்று பிரமித்து போனேன். முதல் பாகத்திற்கே அப்படி இருந்தது என்றால் இரண்டாம் பாகம் எப்படி இருக்கும் என்று நீங்களே நினைத்துப் பாருங்கள்” என்று கூறி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளார்.