ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் | 'அமரன்' வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வாரா 'மதராஸி' ? |
கருப்பு வெள்ளை காலத்தில் மலையாள சினிமா உலகின் சூப்பர் ஸ்டாராக இருந்தவர் பிரேம் நசீர். 600 படங்களுக்கு மேல் நாயகனாக நடித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றவர். 1951ம் ஆண்டு 'தியாக சீமா' என்ற படத்தில் அறிமுகமானார். ஆனால் இந்த படம் வெளிவரவில்லை. அவர் நடித்த இரண்டாவது படமான 'மருமகள்' படம்தான் முதலில் வெளிவந்தது. இந்த படத்தில் அவர் தனது இயற்பெயரான அப்துல் காதர் என்ற பெயரில்தான் அறிமுகமானார்.
அவரது அடுத்த படம் 'விசப்பிட்டடே வலி'. இந்த படத்தில் அவருடன் நடித்தவர் அவருக்கு முன் மலையாள சினிமாவில் முதல் சூப்பர் ஸ்டராக இருந்த திக்குரிசி சுகுமாரன். இந்த படத்தின் படப்பிடிப்பின்போது அப்துல் காதர் என்ற பெயர் சினிமாவிற்கு பொருத்தமா இல்லை என்று கூறி பெயரை பிரேம் நசீர் என்று மாற்றினார் திக்குரிசி சுகுமாரன். அதன் பிறகு இதே பெயரில் 600 படங்களுக்கு மேல் நடித்தார்.
'விசப்பிண்டே வலி' படத்தை மோகன் ராவ் இயக்கினார். கே.வி.கோஷி, குமாரி தங்கம், பங்கஜவல்லி, நானுகுட்டன், மாதப்பன், எஸ்.பி.பிள்ளை உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் தமிழில் 'பசியின் அழைப்பு' என்ற பெயரில் வெளியானது.