நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் | 'அமரன்' வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வாரா 'மதராஸி' ? | ரிலீஸ் தேதி குழப்பத்தில் 'கருப்பு' : காத்திருக்கும் ரசிகர்கள் | பிளாஷ்பேக் : சூப்பர் ஸ்டாருக்கு பெயர் சூட்டிய சூப்பர் ஸ்டார் | பிளாஷ்பேக் : பாரதிராஜா இயக்கதில் நடிக்க மறுத்த சன்னி தியோல் |
பாரதிராஜா இயக்கிய 'கிழக்கே போகும் ரயில்' தமிழில் வெள்ளி விழா கொண்டாடிய படம். இந்த படத்தை பார்த்த பாலிவுட் நடிகர் தர்மேந்திரா தனது மகன் சன்னி தியோலை இந்த கதையில் நடிக்க வைக்க விரும்பினார். ஆனால் அது உடனடியாக நடக்கவில்லை. அதற்குள் சன்னி தியோல் பாலிவுட் படங்களில் அறிமுகமாகி மளமளவென பெரிய ஹீரோவாகி விட்டார்.
பின்னர் 'கிழக்கே போகும் ரயில்' படத்தை பாரதிராஜா ஹிந்தியில் இயக்க முயன்றபோது தர்மேந்திரா அதற்கு மறுத்து விட்டார். “உங்கள் படத்தில் என் மகன் நடிக்க நான் விரும்பியபோது அவர் அறிமுக நடிகர், இப்போது பெரிய ஆக்ஷன் ஹீரோவாகிவிட்டான். அதனால் அவனை கழுதைமேல் அமர்த்தி ஊர்வலம் செல்லும் காட்சிகள் அவனுக்கு பொருந்தாது. அதுவும் அது மென்மையான எழுத்தாளன் கேரக்டரில் நடிக்கும் அளவிற்கு அவன் இப்போது இல்லை” என்று கூறிவிட்டார். இதனால் அந்த படம் கைவிடப்பட்டது.