பிளாஷ்பேக்: முதல் பிளாஷ்பேக் படம் | பேயுடன் பர்ஸ்ட் நைட் கொண்டாடிய ஹீரோ: 'மெஸன்ஜர்' படத்தில் புதுமை | தெலுங்கில் தோல்வி அடைந்த பைசன்: தமிழில் விருதுகளை அள்ளுமா? | கடந்த 10 ஆண்டில் சினிமா தயாரிப்பாளர்கள் நிலை: இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கவலை | பணம் சம்பாதிக்க எத்தனையோ தொழில் இருக்குது.. அதுக்கு, ஆபாச படம் எடுக்கலாம்: பொங்கிய பேரரசு | இயக்குனர் ரஞ்சித் மீதான மற்றொரு பாலியல் வழக்கும் தள்ளுபடி | திலீப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'பைசன்' வரவேற்பு: அனுபமா பரமேஸ்வரன் நீண்ட நன்றிப் பதிவு | திரைப்படத் தொழிலாளர்களுக்கும் பங்கு: தெலுங்கானா முதல்வர் அறிவிப்பு | காந்தாரா சாப்டர் 1 : ஆன்லைன் இணையதளத்தில் 14 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனை |

'ஒரு கைதியின் டயரி' என்கிற பரபர ஆக்ஷன் படத்திற்கு பிறகு அழகான காதல் கதை ஒன்றை படமாக்க விரும்பினார் பாரதிராஜா. இதற்காக அவர் 'பச்சைக்கொடி' என்ற தலைப்பு வைத்து ஒரு கதையும் தயாராக வைத்திருந்தார். அப்போது அவர் கையில் 'முதல் மரியாதை' ஸ்கிரிப்டும் ரெடியாக இருந்தது. ஆனால் சிவாஜி கால்ஷீட் கிடைக்காததால் 'பச்சைக்கொடி'யை ஆரம்பித்தார்.
இதற்கான நடிகர், நடிகைகள் தேர்வை நடத்தினார். நடிகராக ஒரு புதுமுகத்தை தேர்வு செய்து வைத்திருந்தார். நாயகியாக அப்போது சிங்கப்பூரில் இருந்து வந்திருந்த ரஞ்சனியை தேர்வு செய்திருந்தார்.
படத்தின் பூஜையும் பிரமாண்டமாக நடந்தது. அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் கலந்து கொண்டு படத்தை துவக்கி வைத்தார். படத்திற்காக 'பூஜைகேத்த பூவிது' பாடலையும் ரஞ்சனியை வைத்து படமாக்கினார்.
இதற்கிடையில் முதல் மரியாதை படத்தில் நடிக்க சிவாஜி ஒப்புக் கொண்டதும் 'பச்சைக்கொடி'யை அப்படியே விட்டு விட்டு அந்த படத்தை இயக்க தொடங்கி விட்டார். பச்சைக்கொடிக்காக தேர்வான ரஞ்சனியை 'முதல் மரியாதை' படத்தில் நடிக்க வைத்தார். 'பூஜைக்கேத்த பூவிது' பாடல் 'நீதானா அந்த குயில்' என்ற படத்தில் பயன்படுத்தப்பட்டது.
பின்னர் 'பச்சைக்கொடி' கதையை பாரதிராஜாவின் மைத்துனர் மனோஜ்குமார் இயக்கினார். பாண்டியராஜன், நிரோஷா, ஜனகராஜ், நடித்தனர்.