பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

பாரதிராஜா சினிமா வாய்ப்புகள் தேடிக் கொண்டிருந்தபோது அவர் ஜெயலலிதாவை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்று நினைத்தார். இதற்காக ஆர்.செல்வராஜ் எழுதிய சொந்த வீடு என்று கதையை வைத்திருந்தார். அதை ஜெயலலிதாவிடம் கூறி ஒப்புதலும் வாங்கி வைத்திருந்தார். மதிக்காத கணவனை எதிர்த்து ஜெயிக்கும் ஒரு பெண்ணின் கதை இது. இதில் கணவனாக முத்துராமனும், புரட்சிக்கார மனைவியாக ஜெயலலிதாவும் நடிப்பதாக இருந்தது. ஆனால் இந்த திட்டம் ஏனோ கைவிடப்பட்டது.
பாரதிராஜவை வைத்து ஒரு படம் தயாரிக்க ஏவிஎம் விரும்பியது. பல வருடங்களுக்கு பிறகு இது கைகூடியது. ஜெயலலிதாவிற்காக வைத்திருந்த கதையை 'புதுமைப்பெண்' என்ற பெயரில் ஏவிஎம்மிற்காக இயக்கினார். இதில் ஜெயலலிதா நடிப்பதாக இருந்த கேரக்டரில் ரேவதி நடித்தார். முத்துராமன் நடிக்க இருந்த கேரக்டரில் பாண்டியன் நடித்தார்.
பொதுவாக ஏவிஎம் தயாரிக்கும் படங்களின் தலைப்புக்கு முன்னால் 'ஏவிஎம்மின்' என்ற சொல் இடம்பெறும், பாரதிராஜா தான் இயக்கும் படங்களின் தலைப்புக்கு முன்னால் 'பாரதிராஜாவின்' என்று குறிப்பிடுவார். இந்த படத்திற்கு யார் பெயரை போட்டுக் கொள்வது என்ற பிரச்னை வந்தபோது ஏவிஎம் படைப்பாளியை மதித்து 'பாரதிராஜாவின் கைவண்ணத்தில் ஏவிஎம்மின் புதுமைப்பெண்' என படத் தலைப்பை வெளியிட்டது.




